சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் வெளியான ‘SK20' பூஜை கிளிம்ப்ஸ் வீடியோ!!

சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் வெளியான ‘SK20' பூஜை கிளிம்ப்ஸ் வீடியோ!!

பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக மாறியவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தன்னுடைய காமெடி வசனங்கள் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் வசம் இழுத்துவிட்டார். குறிப்பாக சிறுவர் சிறுமிகளை தன்னுடைய ரசிகர்களாக ஆக்கிக்கொண்ட சிவா தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர்.

இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயனின் 20வது படத்தை தயாரிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்  நிறுவனம் அவருக்கு பிறந்த நாள் பரிசாக க்யூட் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் ‘எஸ்கே 20’ படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் உள்ளன. ஒரு நிமிடத்திற்கு மேலாக இருக்கும் இந்த க்யூட் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் அவரின் ரசிகர்களுக்கு இந்த வீடியோ ஒரு டிரீட்டாக அமைந்திருக்கிறது.