இனி காமெடியானாக நடிக்க மாட்டீர்களா..? சிவகார்த்திகேயனுக்கு சூரியின் கிண்டல் பதில் 

இனி காமெடியானாக நடிக்க மாட்டீர்களா..? சிவகார்த்திகேயனுக்கு சூரியின் கிண்டல் பதில் 

வெண்ணிலா கபடிக்குழு இந்த படத்தில் வருகின்ற 50 பரோட்டா காட்சியை யாரும் மறக்க முடியாது சூரியின் முகம் சரியாக கவனிக்கப்பட்டது என்றால் அது அப்போதிலிருந்து தான் அந்த படத்திற்கு பிறகு சாதாரன சூரியாக இருந்தவர் பரோட்டா சூரியாக அவதரித்தார்.

தொடர்ந்து சிவகார்த்திகேயன் விஜய், அஜித் என பல்வேறு முன்ணணி நடிகர்களோடு நடித்து வந்த சூரி விடுதலை என்கிற படத்தில் நாயகனாகவும் அவதாரம் எடுக்கிறார். 

சந்தானம் வடிவேலு விவேக்கை தொடர்நது சூரியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கியமான ரோலில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தககது.

நடிகர் சூரி தனது பிறந்த நாளை முன்னிட்டு ஃபோட்டோ சூட் ஒன்றை ஷேர் செய்திருந்தார், அந்த புகைப்படங்கள் இணையத்தை அனல் பறக்க செய்தது. இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் புகழ்ந்து தள்ளினர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சூரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அண்ணன் ஹீரோவாகிட்டார் நாம சங்கத்து இனி வேற ஆள தான் பாக்கனும் என காமெடியாக ஒரு வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

முதல் முறையாக சூப்பர் ஸ்டாருடன் இணைந்த சூரிக்கு அண்ணாத்த படத்திற்காக சூரியின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அப்படியெல்லாம் விட முடியாது தலைவரே சர்க்கஸ் சிங்கம் இருக்கணும் சங்கம்தான் செயலாளர் இருக்கணும் என சிவகார்த்திகேயனுக்கு பதிலளித்துள்ளார்.