திரிஷாவை பார்த்து "உயிர் உங்களுடையது தேவி" என முழங்கிய மாணவர்கள்...!!

திரிஷாவை பார்த்து "உயிர் உங்களுடையது தேவி" என முழங்கிய மாணவர்கள்...!!

பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவின் போது திரிஷாவை பார்த்து உயிர் உங்களுடையது தேவி என அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கூச்சலிட்டனர்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் விளையாட்டு திடலில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு திரைப்படத்தின் முன்னோட்டமாக பொன்னியன் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி, விக்ரம், ஜெயராம், நடிகை திரிஷா, ஐஸ்வர்யா, லட்சுமி படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஆகியோர் பங்கேற்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர். திரைப்படத்தின் சுவாரசிய தகவல்களையும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த உற்சாக அனுபவங்களையும் நடிகர்கள் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர்.

மேடையில் முதலாவதாக பேசிய நடிகர் ஜெய்ராம், பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று வெளியீட்டிற்கு முன்பு பசிக்குது மணி என்ற கதையை நான் சொல்லியது மிகவும் பிரபலமாகியது, தற்போது இன்னொரு கதை மனதிற்கு வருகிறது என்றார். தாய்லாந்தில் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது நடிகர் பிரபு குதிரையில் ஏறுவதற்கு சுழி பார்க்க வேண்டும் என்பார். தாய்லாந்து குதிரையை பார்த்தவுடன் இது குதிரை இல்லை ஓட்டகம் மாதிரி இருக்கிறது எனவே ஏறவே முடியாது என இயக்குனர் மணிரத்னத்திடம்  தெரிவித்ததாக தெரிவித்தார்.

தொடர்ந்து நடிகர் கார்த்தி பேசியதாவது, கல்லூரி படிக்கும் போது காதலுக்காக ஏங்கியதற்காக வந்தியத்தேவன் கதாப்பாத்திரம் தனக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அனைத்தையும் ஜெயம் ரவியிடம் பகிர்ந்து கொள்வதாக கூறிய அவர் நடிகர் விக்ரமின் ஸ்டைல் தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறினார்.

அடுத்ததாக நடிகை திரிஷா பேசிய போது உயிர் உங்களுடையது தேவி என திடல் முழுவதும் இருந்த மாணவர்கள் ஒரு சேர முழங்கிட எப்போதுமே உயிர் உங்களுடையது தான் என்றார் திரிஷா.

பின்னர் பேசிய நடிகர் விக்ரம் ஆத்திய கரிகாலன் கதாபாத்திரத்தை ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவித்தார்.  இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் ஏறி PS Anthem பாடலை வெளியிட திடல் முழுவதும் உற்சாக கோலம் பூண்டது. மேலும் நேற்று தொடங்கிய படத்தின் விளம்பரம், திருச்சி, கோவை, பெங்களூர், மும்பை இந்தியாவின் அனைத்து பெரு நகரங்களிலும் வருகின்ற ஏப்ரல் 27ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.