மீண்டும் ட்விட்டர் பக்கத்தில் பெயரை மாற்றிய சம்ந்தா...

நாக சைதன்யாவுடனான விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு நடிகை சமந்தா டுவிட்டர் பக்கத்தில் தனது பெயரை மீண்டும் சமந்தா என மாற்றியுள்ளார்.

மீண்டும் ட்விட்டர் பக்கத்தில் பெயரை மாற்றிய சம்ந்தா...

 தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து வந்த சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையே சமந்தா கடந்த ஜூலை மாதம் ட்விட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன.

ஆனால் இதுகுறித்து அவர்கள் இருவரும் வாய் திறக்கக்காமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், நேற்று இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாக சைதன்யாவுடனான தனது விவாகரத்து முடிவை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் சமந்தா. இந்நிலையில் ட்விட்டரில் தனது பெயரை மீண்டும் சமந்தா என மாற்றியுள்ளார்.