சிங்க முகத்துடன் மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா.. பிரபல நடிகர் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சிங்க முகத்துடன் மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா.. பிரபல நடிகர் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

பிரபல இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா நடிகராக அவதாரம் எடுத்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 
கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்திருந்த ‘நெஞ்சம் மறப்பதிலை’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

இவர் ‘கடமையை செய்’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். யாஷிகா ஆனந்த் நாயகியாக நடித்துவரும் இப்படத்தை வெங்கட் ராகவன் என்பவர் இயக்கி வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று வெளியிட்டார்.

அந்த போஸ்டரில் பாதி சிங்க முகமும், பாதி எஸ்.ஜே.சூர்யா முகமும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.