ரம்யா பாண்டியனின் நெக்ஸ்ட் மூவி அப்டேட்... படத்தின் தலைப்பே வேற மாதிரி இருக்கே

ரம்யா பாண்டியனின் நெக்ஸ்ட் மூவி அப்டேட்... படத்தின் தலைப்பே வேற மாதிரி இருக்கே

2015-ல் வெளியான டம்மி பட்டாசு என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ஜோக்கர் திரைப்படத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணாக நடித்திருந்தார். இவரின் நடிப்பை பார்த்த சமுத்திரகனி ரம்யாவை ஆண்தேவதை திரைப்படத்தில் நடிக்க கேட்டார்.

ஆண் தேவதை திரைப்படத்தில் ஐடி பணிபுரியும் பெண்ணாக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதைத் தொடர்ந்து குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். பின் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கு பெற்றார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரம்யா மிகவும் பிரபலம் அடைந்தார்.

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதையடுத்து அறிமுக இயக்குனர் அருள் அஜித்தின் இயக்கத்தில் இடும்பன்காரி என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.

விறுவிறுப்பான திரில்லர் நிறைந்த துப்பறியும் திரைப்படமாக இடும்பன்காரி திரைப்படம் உருவாகி வருகிறது என்று தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.