படத்தின் விளம்பரத்திற்காக தனி விமானத்தை புக் செய்த ராஜமௌலி...!!!

படத்தின் விளம்பரத்திற்காக தனி விமானத்தை புக் செய்த ராஜமௌலி...!!!

பாகுபலி திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி தற்பொழுது இயக்கியிருக்கும் திரைப்படம் ஆர் ஆர் ஆர். இப்படத்திற்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் விடியோக்கள் சமூக வலைதளங்களில் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ராம் சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் இணைந்து நடிப்பதால் அவர்களது ரசிகர்களுக்கு மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிகுந்த அளவில் காணப்படுகிறது.  வரலாற்று பின்னணியை மையமாகக்கொண்ட இப்படம் தமிழ், தெலுகு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

ஜனவரி முதல் வாரத்தில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் விளம்பர பணிகளை படக்குழு முழு வீச்சில் தொடங்கியுள்ளது. படக்குழு விளம்பர பணிகளுக்காக சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்ல விருக்கின்றனர். இந்த விளம்பர பணிகளை மேற்கொள்ள தனி விமானம் ஒன்றை படக்குழு புக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.