பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்டம்.. வெளியானது ஆர் ஆர் ஆர் பட மேக்கிங் வீடியோ!

ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீசை எதிர்நோக்கும் ரசிகர்களுக்கு பிரம்மிப்பூட்டும் வகையில் படக்குழுவினர் வெளியிட்ட மேக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்டம்.. வெளியானது ஆர் ஆர் ஆர் பட மேக்கிங் வீடியோ!

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் இரத்தம் ரணம் ரெளத்திரம்  என்கிற ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தை டிவிவி தனய்யா தயாரித்து வருகிறார். தற்போது இப்படம் படப்பிடிப்பில் இறுதிக்கட்டத்தை நெறுங்கி உள்ளது. 
இந்நிலையில், ஆர்.ஆர். ஆர் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ரசிகர்களை பிரம்மிப்பூட்டும் வகையில் இந்த மேக்கிங் வீடியோ அமைந்துள்ளதால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் வெளியானால் பாகுபலி பட சாதனைகளை நிச்சயம் முறியடிக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில்,கொரோனா 2-வது அலை காரணமாக இரண்டு மாதங்கள் ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு முடங்கியதால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஆர்.ஆர்.ஆர் படம் திட்டமிட்டபடி அக்டோபர் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என இந்த மேக்கிங் வீடியோ மூலம் உறுதிபடுத்தி உள்ளனர்.