ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு..?

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு..?

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வரும் படும் இரத்தம், ரணம், ரௌத்திரம். ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனா சூழல் மற்றும் திரையரங்குகள் இன்னும் முழுமையாக திறக்கப்படாத காரணத்தினால் படம் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு குறிப்பிட்டுள்ளது...