ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பூஜை.!!

ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பூஜை.!!

இயக்குநர் சங்கர், ராம் சரண் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில், ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும், ஜெயராம், அஞ்சலி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு, திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், சிரஞ்சீவி, ரன்வீர் சிங், எஸ்.எஸ்.ராஜமவுலி மற்றும் லிங்குசாமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.