பீஸ்ட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பூஜா ஹெக்டே....!!

பீஸ்ட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பூஜா ஹெக்டே....!!

நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இந்த படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இதில், நடிகர் விஜய் ராணுவ அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத், எடிட்டராக நிர்மல், கலை இயக்குநராக கிரண் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் துவங்கியது. அதனை தொடர்ந்து அண்மையில் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. இதற்கிடையில் கடந்த வாரம் பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்தநிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  அதில் படத்தின் ஷூட்டிங்கை தான் நிறைவு செய்துள்ளதாக பூஜா ஹெக்டே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நீங்களும் இந்தப் படம் பார்க்கும்போது நன்றாக சிரிப்பீர்கள். இந்த படம் ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையில் ஒரு சிறந்த படமாக இருக்கும் 

படப்பிடிப்பின் போது நாங்கள் விடுமுறையை கழிப்பது போன்று உணர்ந்தோம். சோகமான விஷயம் என்னவென்றால் பீஸ்ட் செட்டில் இன்று எனக்கு கடைசி நாள். என்னுடைய போர்ஷனுக்கான படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டது. என்றும் அவர் அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.