அடியே அழகே... என் அழகே அடியே....கவர்ச்சி உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நிவேதா....குவிந்து வரும் லைக்ஸ்...!

அடியே அழகே... என் அழகே அடியே....கவர்ச்சி உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நிவேதா....குவிந்து வரும் லைக்ஸ்...!

ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதனையடுத்து சங்கத்தமிழன், திமிரு பிடிச்சவன், டிக் டிக் டிக் , பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியான பொன் மாணிக்கவேல் படத்தில் நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தார்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் எண்ரி கொடுத்த நிவேதா,  தெலுங்கு படங்களான ‘சித்ரலஹரி’ மற்றும் ‘ப்ரோச்சேவரேவரா’ ஆகியவற்றில் நடித்துள்ளார். மேலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஆலவைகுண்டபுரம்லோ மற்றும் தடம் படத்தின் தெலுங்கு ரீமேக் ரெட் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 

நடிகை நிவேதா பெத்துராஜ் நிஜ வாழ்க்கையிலும் துணிச்சல் மிக்கவர். ஃபார்முலா ரேஸ் கார் ரேஸ் பயிற்சி முடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் அவரை பெருமளவில் வாழ்த்தியுள்ளனர். படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில்  இடம் பிடித்துள்ள நிவேதா பெத்துராஜ் முதல்முதலாக தமிழ் சீரியலில்தான் நடித்துள்ளாராம்.

அதாவது நடிகை நிவேதா மாடலிங் துறையில் இருந்த போது அவருக்கு தமிழில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் என்ற தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் முக்கியத்துவம் வாய்ந்த நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் சில காரணங்களால் அந்த தொடர் பாதியிலேயே கைவிடப்பட்டது.

எப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கிடிக்க செய்வார். அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.