யுவன் இசையில் சிம்பு பாடிய புது ஆல்பம் பாடல்!

யுவன் இசையில் சிம்பு பாடியுள்ள புதிய ஆல்பம் விரைவில் வெளியாக உள்ளது.

யுவன் இசையில் சிம்பு பாடிய புது ஆல்பம் பாடல்!

யுவன் சங்கர் ராஜா, சிம்பு கூட்டணியில் உருவான மன்மதன்,வல்லவன், சிலம்பாட்டம், வானம் போன்ற திரைப்படங்களின் பாடல்கள் தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற  நிலையில்,தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும்  மாநாடு படத்திற்கும் யுவன் சங்கர்ராஜா தான் இசையமைத்து வருகிறார். 

இப்படத்தின் முதல் பாடல் ‘மெஹ்ரசைலா' வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா  தயாரித்து இசையமைத்துள்ள புதிய இசை ஆல்பத்தில் இடம்பெறும்  பாடல் ஒன்றை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.

இப்பாடல் காட்சியில் நடிகர் காளிதாஸ் ஜெயராம், நடிகை மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த பாடலுக்கு சாண்டி நடனம் அமைத்துள்ளார். இந்த ஆல்பம் பாடல் விரைவில் வெளியாக உள்ளது.