நயன்தாராவின் அடுத்த ஜோடி இவர்தானா..!!

நயன்தாராவின் அடுத்த ஜோடி இவர்தானா..!!

மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் ப்ரித்விராஜ் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நேரம், பிரேமம் போன்ற படங்கள் மூலம் மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். 

அதையடுத்து அல்போன்ஸ் புத்ரன் தற்போது பிரித்விராஜ் உடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். மேஜிக் ஃப்ரேம்ஸுடன் இணைந்து நடிகர் பிருத்விராஜ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு கோல்டு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். இந்தப் படம் அடுத்த மாதம் துவங்கப்படும் என்று கூறப்படுகிறது. 

பிரித்விராஜ் தற்போது மோகன்லால் நடிப்பில் 'ப்ரோ டாடி' என்ற படத்தை இயக்கி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.