சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது “ கடைசி விவசாயி ” ..!

சிறந்த திரைப்படத்திற்கான  தேசிய விருதைப் பெற்றது “ கடைசி விவசாயி ” ..!

2021-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான  தேசிய  திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

அதன்படி,  தமிழில் பின்னணி இசை அமைப்பாளராக தனக்கென தனி ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான  தேசிய விருது கிடைத்திருக்கிறது. தமிழில் வெளிவந்த ஆவணப்படமான   " கருவறை " என்ற படத்திற்கு  இசையமைத்ததற்காக  இவருக்கு  தேசிய விருது கிடைத்திருக்கிறது.

அதோடு,  புஷ்பா திரைப்படத்தில் இசையமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது,  இசையமைப்பாளர் தேவிஸ்ரீ  பிரசாத் - க்கு கிடைத்திருக்கிறது.

மேலும், சிறந்த ஆவணப்பட இயக்குனருக்கான தேசிய விருது தமிழில்  வெளியான  " சிற்பிகளின் சிற்பி"  என்ற ஆவணப்படத்தின் இயக்குனர் பி. லெனின் என்பவருக்கு   கிடைத்திருக்கிறது. 

அதோடு, சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது நடிகர் விஜய் சேதுபதி நடித்து தமிழில் வெளிவந்த     " கடைசி விவசாயி"  திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் மணிகண்டன். இவர் ஏற்கனவே காக்காமுட்டை , படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றவராவார்.

அதன் பின்னர், விதார்த் நடிப்பில் குற்றமே தண்டனை, விஜய்சேதுபதி நடிப்பில் ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கியிருந்தார்.  இறுதியாக இவர் கடைசி விவசாயி என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். இவரது அனைத்து படங்களுமே நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், மற்றுமொரு திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. ஹிந்தியில்  நடிகர்  மாதவன் இயக்கி நடித்து வெளிவந்த " ராகெட்ரி - தி நம்பி விளைவு ", என்ற திரைப்படத்திற்கும் சிறந்த தெஇறைபடத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது. 

சிறந்த நடிகருக்கான தேசிய விருது தெலுங்கில் வெளியாகி  மெகாஹிட் கொடுத்த " புஷ்பா ", படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்திருக்கிறது.  

 
சிறந்த நடிகைக்கான விருது  " கங்குபாய் கத்தியவாடி " திரைப்படத்திற்காக நடிகை ஆலியா பட் -க்கு  கிடைத்திருக்கிறது.

சிறந்த பின்னணிப் பாடகிக்கான  தேசிய விருது , இறைவன் நிழல் படத்தில் வநத ' மாயாவா  தூயவா' பாடலை பாடியதற்காக பின்னணிப் பாடகி ஷ்ரேயா கோஷல் -க்கு கிடைத்திருக்கிறது. 

தெலுங்கு மொழியில் வெளிவந்த  மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடு, சிறந்த நடனத்திற்காக " நாட்டு நாட்டு " பாடல் மூலம் பட்டி தூட்டி எங்கும் கலக்கிய ' RRR ' திரைப்படத்திற்கு இந்த முறை 5 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது கூடுதல் சிறப்பு. 

சிறந்த சண்டைக்காட்சி இயக்குதல் என்ற பிரிவில், ' RRR '  திரைப்படத்தின்  சண்டைப்பயிற்சியாளர் கிங் சாலமன் என்பவருக்கு தேசிய விருதும், கூடவே,  சிறந்த நடன இயக்குனர் என்ற  பிரிவில் அந்த திரைப்படத்தின் நடன இயக்குனரான பிரேம் ரக்ஷித்  எனபவருக்கும் தேசிய விருது கிடைத்திருக்கிறது.

அதோடு, சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்  எனப்படும்,  சிறந்த வரைகலைக்கான  தேசிய விருது ' RRR '  திரைப்படத்தின்  வரைகலை நிபுணரான ஸ்ரீனிவாஸ் மோகன் என்பவருக்கு கிடைத்திருக்கிறது. 

இதையடுத்து, சிறந்த பாடகருக்கான தேசிய விருது,  ' RRR '  திரைப்படத்தின்  " கோமுரம் பீமுடோ "  என்ற பாடலைப் பாடிய பின்னணி பாடகரான கால பைரவா என்பவருக்கு கிடைத்திருக்கிறது. 

கூடுதலாக, சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது,  ' RRR '  திரைப்படத்தில் ”நாட்டு நாட்டு”  பாடுலுக்கு இசையமைத்த கீரவாணி -க்கு கிடைத்திருக்கிறது. 

அந்தவகையில்,  ஏற்கனவே  ஆஸ்கார் விருதை பெற்றிருந்த ' RRR '  திரைப்படம் தற்போது 5  தேசிய விருதையும் பெற்றிருக்கிறது.