ஒர்கவுட் செய்து உடலை ஷேப்பில் வையுங்கள்? என அட்வைஸ் செய்த நெட்டிசன்...தக்க பதிலடி கொடுத்த நடிகை நந்திதா!!

ஒர்கவுட் செய்து உடலை ஷேப்பில் வையுங்கள்? என அட்வைஸ் செய்த நெட்டிசன்...தக்க பதிலடி கொடுத்த நடிகை நந்திதா!!

சினிமா துறையில் இருக்கும் நடிகர் நடிகைகள் பொதுவாகவே சமூக வலைதளங்களில் ட்ரோல்ஸ்களையும், விமர்சனங்களையும் சந்தித்து வருவது வழக்கம். அதேபோன்று நடிகைகள் தங்களது புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ வெளியிட்டால் ஒன்று அதை வைரலாக்குவார்கள் அல்லது அதில் ஏதாவது குறை இருந்தால் அதை வைத்தே ட்ரோல் செய்து வருவார்கள். இப்படி செய்வதால் சில சமயம் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகைகளும் பதிலளித்து வருவர்.

அந்த வகையில் நடிகை நந்திதா, வெளியிட்டுள்ள போட்டோவை கிண்டல் செய்த  நெட்டிசன்களுக்கு  அவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அட்டகத்தி படம் மூலம் அறிமுகமான நடிகை நந்திதா, அடுத்ததாக எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைபட்டா பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தார்.

இப்படி படங்களில் பிஸியாக நடித்து வரும் நந்திதா, சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து வருவார். இந்நிலையில்  நடிகை நந்திதா  சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவர் குண்டாக இருப்பதாக  கிண்டல் செய்து கமெண்ட் செய்து வந்துள்ளனர்.

அதிலும்  ஒரு நபர் நந்திதாவை ஒர்கவுட் செய்து உடலை ஷேப்பில் வைத்துக்கொள்ளும்படி அட்வைஸ் செய்து மெசேஜ் பண்ணி இருக்கிறார். இதனால் கோபமடைந்த நந்திதா, "நான் ஒன்றும் கடவுள் இல்லை. நானும் மனுஷி தான். நானும் சில விஷயங்களை கடந்து வருகிறேன். எப்படி மக்கள் இது போல எழுதுகிறார்கள். மேலும் I love my body and I like this phase of my life, and how I look" என்று தனது ஸ்டோரி பக்கத்தில் காட்டமாக பதிலளித்துள்ளார்.