இந்தியாவிலேயே விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய ஜூனியர் என்டிஆர்..!!

டோலிட்டில் முன்னணி நடிகராக வலம் ஜூனியர் என்டிஆர் ஒரு பேன்சி நம்பருக்காக சுமார் 17 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளார்.

இந்தியாவிலேயே விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய ஜூனியர் என்டிஆர்..!!

நடிகர் ஜூனியர் என்டிஆர் சமீபத்தில் லாம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்ஸ்யூல் (Lamborghini Urus Graphite Capsule Edition) என்ற சொகுசு காரை வாங்கினார். அதுமட்டுமின்றி மற்றொரு ஆச்சரியமளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது புதிய காரின் பதிவெண்ணிற்காக பல லட்சங்களை வாரி இறைத்துள்ளாராம். சமீபத்தில் ஹைதராபாத் ஆர்டிஓ அதிகாரிகள் TS 09 FS 9999 என்ற எண்ணை ஏலம் விட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்த ஏலத்தில் பங்கேற்ற ஜூனியர் என்டிஆர் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சுமார் ரூ. 17 லட்சத்திற்கு ஏலம் கேட்டிருக்கிறார். இதை தொடர்ந்து ஆர்டிஓ அதிகாரிகள் ஜூனியர் என்டிஆருக்கே அப்பதிவெண்ணை வழங்குவதாக அறிவித்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த டோலிவுட் திரையுலகையே மிரள வைக்கும் வகையில் நிகழ்ந்துள்ளது.