மறைந்த யூடியூபர் டெக்னோப்ளேடுக்கு Minecraft நிறுவனம் அஞ்சலி செலுத்தியது;

கடந்த வாரம் அவர் புற்றுநோயால் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்திய நிலையில், பிரபல வீடியோ கேம் நிறுவனமான Minecraft, மறைந்த டெக்னோபிளேடுக்கு அஞ்சலி செலுத்தியது.

மறைந்த யூடியூபர் டெக்னோப்ளேடுக்கு Minecraft நிறுவனம் அஞ்சலி செலுத்தியது;

தங்க கிரீடம் அணிந்த ஒரு பன்றி இப்போது கேமிங் லாஞ்சரான Minecraft ஸ்பிளாஷ் போட்டோவாக வெளியிடப்பட்டது. அது, டெக்னோபிளேட்டின் கேமிங் அவதாரமான பெஜூவல்-கிரீடம் அணிந்த ராஜ பன்றி என்ப்அது குறிப்பிடத்தக்கது. டெக்னோபிளேடிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இது வெளியிடப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து அந்த நிறுவனம் பேசுகையில், "எங்களது துக்கத்தை விவ்வரிக்க வார்த்தைகள் இன்றி தவிக்கிறோம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இங்கே Minecraft நிறுவனத்தில் உள்ள அனைவரும் டெக்னோபிளேடின் இழப்பால் மனம் உடைந்துள்ளோம். அவர் எங்கள் மைன்கிராஃப்ட் கேமிங் சமூகத்திற்கு பெரிய அர்த்தம் தந்தார்.அவரை நாங்கள் மிஸ் செய்கிறோம்" என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

யார் இந்த டெக்னோபிளேட்?

பிரபல கேமிங் லாஞ்சரான Minecraft தளத்தில், நன்றாக விளையாடி அதனை தனது யூடியூப் பக்கத்தில் ஸ்ட்ரீம் செய்பவர் தான் டெக்னோபிளேட். 23 வயதான அவர், பல வருடங்களாக ஸ்ட்ரீம் செய்து தனது துறையில் முன்னிலையும் வகித்து வந்தார். வெகு நாட்களாக கான்ச்ரால் பாதிக்கப்பட்டு வந்த அவர், கடந்த வாரம், இயற்கை எய்தினார்.

டெக்னோபிளேடின் கடைசி வீடியோ, அவரது தந்தையால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட 11 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட அவரது YouTube சேனலில் அந்த வீடியோ, கடந்த வெள்ளிக்கிழமை வெளியானத் உகுறிப்பிடத்தக்கது.

'so long nerds' என்ற தலைப்பில் வெளியான அந்த வீடியோவில் பேசிய டெக்னோப்ளேட், "அனைவருக்கும் வணக்கம், நான் உங்கள் டெக்னோப்ளேட். நீங்கள் இதைப் பார்க்கும் போது, நான் இறந்திருப்பேன். பல ஆண்டுகளாக எனது வீடியோக்களையும் பதிவுகளையும் ஆதரித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. எனது விளையாட்டில் இருப்பது போல, நிஜ வாழ்க்கையிலும் இன்னும் 100 உயிர்களைப் பெற்றிருந்தால், ஒவ்வொரு முறையும் நான் டெக்னோபிளேடாகவே பிறக்க ஆசைப் படுவேன். ஏன் என்றால், நான் டெக்னோப்ளேடாக வாழ்ந்த அந்த நாட்கள், என் வாழ்க்கையின் மகிழ்ச்சியானவை." என்று கூறினார்.

கடந்த ஆண்டு,பல மெர்ச்சுகளை விற்றது மன்னிப்பு கேட்ட அவர், தனது சகோதர சகோதரிகள் அதில் வந்த பணம் மூலம் கல்லூரிக்கு செல்வதாகவும் தெரிவித்தார். மிகவும் உருக்கமான அந்த வீடியோ, பல மில்லியன் பார்வையாளர்களைப் பெற்ற நிலையில், அவரது சப்ஸ்கிரைபர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அவரது இறுதி வீடியோவை வெளியிட்ட டெக்னோப்ளேடின் தந்தை, "அவர் சொல்ல விரும்பும் அனைத்தையும் அவர் கூறினார் என்று எனக்கு தோன்றவில்லை. ஆனால் அவர் மனதில் இருந்த பலவற்றைப் பேசினார். அந்த வீடியோவை எடுத்து முடித்து பின் எட்டு மணி நேரம் மட்டுமே வாழ்ந்தார்.” என்று கூறி கண்கலங்கினார்.

ட்விட்டரில் வைரலாகி வரும் இதன் போட்டோக்கள், அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருவதோடு, டெக்னோபிளேடையும் நினைவு கோரி வருகின்றனர்.