OTTயில் வெளியாக போகும் மகான் திரைப்படம்...!!

OTTயில் வெளியாக போகும் மகான் திரைப்படம்...!!

விக்ரமின் 60வது படமாக உருவாகியுள்ளது மகான் திரைப்படம். கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பேனரில் லலிதா குமார் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் மேக்கிங் வீடியோவும் இணைத்து ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்ட சூறையாட்டம் பாடல் பட்டையை கிளப்புவதாக அமைந்திருந்தது.

இந்த படத்தில் முதல் முறையாக தந்தை மகன் துருவ் விக்ரம்  இணைந்து நடித்துள்ளனர் இவர்களுடன் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ள மகான் திரைப்படத்தில் துருவ் போலீஸாகவும் விக்ரம் மகான் என்ற கேங்ஸ்டராகவும் நடித்துள்ளனர் என்ற தகவல் வெளியானது. இந்த படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே ரசிகர்கள் ஆவல் அதிகமாக இருந்தது அதிலும் இதன் பஸ்ட் லுக் போஸ்டரும் மேக்கிங் வீடியோவும் வெளியாகி இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி விட்டது. எனவே அடுத்த வருடம் வெளியாகும் படங்களில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் பட்டியலில் மகான் படமும் இடம்பிடித்து இருக்கிறது.

இந்த படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல் வந்த நிலையில் தற்போது மகான் படத்தை சென்சார் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டு, ஒப்புதலையும் பெற்றுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது முழுக்க முழுக்க U சான்றிதழ் படங்களில் மட்டுமே நடித்து வந்த விக்ரம் பல வருடங்களுக்கு கழித்து U/A படத்தில் நடித்துள்ளார்.

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்பதால் திரையரங்கில் வெளியாகும் என்று நினைத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கு வகையில் ஒரு பெரிய தொகையை கொடுத்து அமேசான் ப்ரைம் இந்த படத்தை வாங்கிவிட்டதாக தகவல் வெளியானது. 

சமீபகாலமாக கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வந்த படங்கள் எதுவும் பெரிதாக போகாததால் இந்த படத்தை திரைக்கு கொண்டுவந்தால் நஷ்டத்தை சந்திக்க நேரிடுமோ என்ற தயக்கத்தினால் தயாரிப்பாளர் அமேசானிற்கு மகான் படத்தை விற்றுவிட்டதாக தகவல் வெளிவந்தது.

எது எப்படி இருப்பினும் விக்ரம் படம் வந்தால் போதும் என்று விக்ரம் ரசிகர்களும் கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்களும் படத்தை ஆவலோடு எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர். சென்சார் போர்டிடமிருந்து சான்றிதழ் வந்துவிட்டதால் கூடிய விரைவில் மகான் படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் ப்ரைம் பொங்கலுக்கு அல்லது குடியரசு தினத்திற்கு படத்தை உலகம் முழுவது வெளியிடும் என்று கூறப்படுகிறது.