கார்த்தியின் "ஜப்பான்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது!

நடிகர் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.  

திருச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அனு இமானுவேல் உள்ளிட்டோர் நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இதையும் படிக்க : முத்துராமலிங்க தேவர் ஆலய தேர் பவனி... !

இப்படத்திற்கு  ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்நிலையில் ஜப்பான் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில், இதுவரை 11 லட்சம் பார்வையாளர்கள் கண்டு களித்துள்ளனர்.