முத்துராமலிங்க தேவர் ஆலய தேர் பவனி...!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு தேர் பவனி நடைபெற்றது. 

நாளை முத்துராமலிங்க தேவரின் 116 ஆவது ஜெயந்தி, 61 வது குருபூஜை ஆகியவற்றை முன்னிட்டு, 28-ஆம் தேதி ஆன்மீக விழா, 29 ஆம் தேதி அரசியல் விழா, 30ம் தேதி குருபூஜை விழா என மூன்று தினங்களாக நடைபெற்று வருகிறது. 

இதையும் படிக்க : ஆம்னி பேருந்து கட்டணம் 5% குறைக்கப்படுவதாக அமைச்சர் அறிவிப்பு...!

அதன்படி, நேற்று இரவு அவருடைய சிலைக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்து ஆயிரத்தெட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து ஐம்பொன்னால் செய்யப்பட்ட சிலை மின் ஒளியால் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் வைக்கப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது.