சர்வதேச திரைப்பட விழாவில் 'கண்ணே கலைமானே'!

சர்வதேச திரைப்பட விழாவில் 'கண்ணே கலைமானே'!

சர்வேதேச அல்லகேட் திரைப்பட விழாவில் சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், நடிகர் உதியநிதி, தமன்னா உள்ளிட்டோரின் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கண்ணே கலைமானே. சீனு ராமசாமியின் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இத்திரைப்படம் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் சர்வேத திரைப்பட விழாவில் உலக சினிமா பிரிவில் கலந்து கொள்ள உள்ளது. அமெரிக்காவின் லா ஜொல்லா நகரில் நடைபெறும் 20 வது அல்லகேட் திரைப்பட விழா வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி கலந்து கொள்ள உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இத்திரைப்படம் 17 ஆவது சர்வேதச சோகால் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு சிறந்த திரைப்படத்திற்காக விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க: ”எதிர்க்கட்சிகளுக்கு பிரிவினை அரசியல் தான் முக்கியம்” - ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!