இளையராஜாவை மீண்டும் முகநூலில் விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்

இளையராஜாவை மீண்டும் முகநூலில் விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்

இளையராஜாவின் பாடலை விமர்சித்து ஜேம்ஸ் வசந்தன் எழுதியுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் உடை குறித்து ஜேம்ஸ் வசந்தன் விமர்சிக்க, அவரது ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார். கடந்த மாதம் இளையராஜா ஒரு மட்டமான மனிதர், இவர் ஆன்மிகத்துக்குள்ள போறேன்னு சொல்லிட்டு, வெளியில ரொம்ப அசிங்கமா பேச ஆரம்பிச்சாரு என்று பதிவிட்டிருந்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | ஆன்லைன் வர்த்தகம் - தமிழக வணிகத்தை காக்க வேண்டும் - சந்திரன் ஜெயபால்

இந்த நிலையில் மீண்டும் இளையராஜா குறித்து விமர்சித்துள்ளார். இளையராஜா குறித்து அவரது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், நேற்றுதான் இந்தப் பாடல் வரியைப் பார்த்தேன், அதிர்ச்சியுற்றேன். எப்படி இவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இந்தப் பிழையை அனுமதித்தார் என்று!
"என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்" இத்தனை நாளும் அது "... பல மின்னல் ஏழும் ..." என்றே நினைத்திருந்தேன். ஒன்று, அந்தக் குறில் அந்த சந்தத்துக்கு வராது என்று சொல்லி கவிஞரை அந்தச் சொல்லை மாற்ற வைத்திருக்க வேண்டும். அல்லது, அது நன்றாக இருக்கிறதாய் நினைக்கும் பட்சத்தில் அதை குறிலாகப் பாடவைத்திருக்க வேண்டும் பாடகரை.சில இடங்களில் சில ஒப்புரவுகள் செய்வது தவிர்க்க இயலாதுதான் என்றாலும், இவ்வளவு அப்பட்டமான சிதைவை நியாயப்படுத்தவே முடியாது. இது மொழிக்குச் செய்த இரண்டகம்.


ஜேம்ஸ் வசந்தன் முகநூல் பதிவு

நேற்றுதான் இந்தப் பாடல் வரியைப் பார்த்தேன், அதிர்ச்சியுற்றேன். எப்படி இவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இந்தப்  பிழையை  அனுமதித்தார்  என்று!
"என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்"
இத்தனை நாளும் அது "... பல மின்னல் ஏழும் ..." என்றே நினைத்திருந்தேன். 
ஒன்று, அந்தக் குறில் அந்த சந்தத்துக்கு வராது என்று சொல்லி கவிஞரை அந்தச் சொல்லை மாற்ற வைத்திருக்க வேண்டும்.  அல்லது, அது நன்றாக இருக்கிறதாய் நினைக்கும் பட்சத்தில் அதை குறிலாகப் பாடவைத்திருக்க வேண்டும் பாடகரை. சில இடங்களில் சில ஒப்புரவுகள் செய்வது தவிர்க்க இயலாதுதான் என்றாலும், இவ்வளவு அப்பட்டமான சிதைவை நியாயப்படுத்தவே முடியாது.
இது மொழிக்குச் செய்த இரண்டகம். *சிலர் விளக்கச் சொல்லி கேட்பதால் அதையும் இங்கேயே சேர்த்து விடுகிறேன்.
இந்த சந்தம் -
தன்னன்னா தன்னன்னா - தன
தன்னன் னானன் னானா
இரண்டாவது வரியின் இரண்டாவது சீர் "னானன்.." 'னா' என்கிற நெடிலுடன் தொடங்குகிறது. அதற்கு எழுதப்பட்டிருக்கிற 'எழும்' என்பது குறிலுடன் தொடங்குகிறது. 
அதை இந்தப் பாடலில் பாடியிருப்பது போல சமத்தில் பாடினால் நெடிலாக மட்டுமே பாட இயலும். அதைச் சரிசெய்ய விழைந்தால், சமம் தள்ளிப் பாடினால் குறிலாக ஒலிக்கை வைக்க இயலும். இங்கே பிழையாக எழுதப்பட்டு, பிழையாகவே பாடப்பட்டிருக்கிறது என்பதுதான் செய்தி.
குறில்-நெடில் என்பவையே மொழியின் அடிப்படை. கவிஞர்கள் சந்தத்துக்கு பாடல் எழுதும்போது இதுதான் அவர்களது மிகப்பெரிய சவால். எல்லா நல்ல கவிஞரும் பிழையின்றி எழுதுபவர்தான்.