"தேசிய திரைப்பட விருதுகள் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது" விஷால் கருத்து!

"தேசிய திரைப்பட விருதுகள் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது" விஷால் கருத்து!

தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எந்த விருதுகளின் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது. 4 பேர் அமர்ந்து ஒருவருக்கு அளிக்கலாம், வேண்டாம் என தீர்மானிப்பதில் எனக்கு உடன்பாடில்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

நடிகர் விஷாலின் 46வது பிறந்தநாளையொட்டி சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மெர்சி ஹோம் முதியோர் கருணை இல்லத்தில் நடிகர் விஷால் முதியோர்களுக்கு உணவு வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.இதன் பின்னர் செய்தியாளர் சந்தித்த நடிகர் விஷால், முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடுவது கடவுளிடம் நேரில் வாழ்த்து பெறுகிற போல் உள்ளது. நடிகர் சங்க தேர்தல் கோரிக்கைகளில் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றிவிட்டோம். கடைசி கோரிக்கையான நடிகர் சங்க கட்டடத்தை கட்டிமுடிப்பதுதான் எங்கள் நோக்கம். அதற்காகதான் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம். தமிழக மக்களுக்கு முக்கியத்துவமான பெருமையான கட்டடமாக, கலாச்சார மையாமாக இருக்க வேண்டும் என்பதால்தான் தாமதமாகிறது. எம்ஜிஆர், கலைஞர் சமாதி போன்று நடிகர் சங்க கட்டிடத்தையும் மக்கள் பார்க்க வரவேண்டும் என நினைக்கிறோம். நடிகர் சங்க கட்டிடம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எந்த விருதுகளின் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது. 4 பேர் அமர்ந்து ஒருவருக்கு அளிக்கலாம், வேண்டாம் என தீர்மானிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு விருது அளிப்பது ரசிகர்கள்தான். ஒரு குழு சார்ந்த ஆலோசனைதான் தேசிய விருதுகளின் பட்டியல் என தெரிவித்தார்.  

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதலில் விஜய் அரசியலுக்கு வரட்டும். விஜய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவரை நீண்டகாலமாக எனக்கு தெரியும். அவருக்கு ஆரம்பகாலத்தில் கிடைத்த விமர்சனங்களை கடந்து வெற்றி பெற்ற தன்னம்பிக்கை எனக்கு பிடிக்கும். எனக்கு தெரிந்த ஒரே விஜய் இளைய தளபதி விஜய்தான். அவரது ரசிகன் நான் என  பெருமையாக சொல்வேன். ஒரு வேளை விஜய்க்கு அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாழ்த்துகள். வாக்காளராக அவர் நல்லது செய்ய வேண்டும் என நினைப்பதாக கூறினார். 

மேலும், இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் விஜய்யின் மகன் ஜேசம் சஞ்சய்க்கும் வாழ்த்துகள். நானும் 25 வருடமாக இயக்குநராக வேண்டும் என நினைத்து வருகிறேன். இப்போது நானும் இயக்குநராக வேண்டும் என என்னை ஜேசன் சஞ்சய் ஊக்கப்படுத்தி உள்ளார் எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க:வழியில் பள்ளம்; பாதையை மாற்றிய சந்திரயான்-3 ரோவர்!