தனது நீண்ட நாள் கனவை நிறைவேறியது.. மகிழ்ச்சியின் உச்சகட்டத்தில் "குட்டி ஜானு"

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "96" படத்தின் மூலம் குட்டி ஜானுவாக சினிமாவில் களமிறங்கியவர் நடிகை கௌரி கிஷன்.

தனது நீண்ட நாள் கனவை நிறைவேறியது.. மகிழ்ச்சியின் உச்சகட்டத்தில்  "குட்டி ஜானு"

அதனை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளார் கௌரி கிஷன். தமிழில் இதுவரை பல படங்களில் நடித்துள்ள கௌரி கிஷன், ஹீரோயினாக எந்த படங்களிலும் இதுவரை நடிக்க வில்லை..

ஆனால், மலையாளத்தில் மர்கம்களி, அனுகிரகீதன் ஆண்டனி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ள கௌரி கிஷனுக்கு தற்போது தெலுங்கிழும் பட வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. தற்போது சோபன் பாபு என்ற படத்தில் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் தென்னிந்திய ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக இருக்கும்  கௌரி கிஷன் தனது நீண்ட நாள் கனவான புது கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

தற்போது ஷோரூமில் கார் வாங்கிய மகிழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அவருக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.