ஐஸ்வர்யா தனுஷின் நெக்ஸ்ட் மூவி அப்டேட் இதோ..!!!

ஐஸ்வர்யா தனுஷின் நெக்ஸ்ட் மூவி அப்டேட் இதோ..!!!

தமிழ் சினிமாவில் இயக்குனராக ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் வலம் வருகிறார். 

இவர் ஏற்கனவே தனுஷின் நடிப்பில் வெளியான '3' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து கௌதம் கார்த்திக்கை வைத்து 'வை ராஜா வை' என்ற படத்தை இயக்கினார். 

இந்த இரண்டு படங்களும் பிறகு எந்த படங்களும் இயக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா தனுஷ், தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.  

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராக இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.