நாய்சேகர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.. வைரலாகும் போஸ்டர்

நாய்சேகர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.. வைரலாகும் போஸ்டர்

நாய் சேகர் என்ற தலைப்பில் உருவாக உள்ள படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

சுந்தர் சி நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும்.

இந்நிலையில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க உள்ள படத்திற்கு நாய் சேகர் என்ற தலைப்பை வைக்கலாம் என படக்குழுவினர் பேசி வந்தனர். ஆனால் முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யாமல் இருந்தனர்.

இதற்கிடையில் காமெடி நடிகர் சதீஷை வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் காமெடி படத்திற்கு நாய் சேகர் தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பதால் படக்குழுவினர் இந்த தலைப்பை முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து, அந்த தலைப்பை தங்களுக்கு சொந்தமாக்கி கொண்டனர்.

இந்நிலையில் நாய் சேகர் என்ற தலைப்பில் உருவாக உள்ள படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.