திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார்...!

ரஜினி, விஜயகாந்த், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வி.ஏ.துரை  காலமானார்.

தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான  பாபா திரைப்படத்தில் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணிபுரிந்து, என்னம்மா கண்ணு, பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ துரை. 

இதையும் படிக்க : இன்று முதலமைச்சர் தலைமையில் ஆட்சியர், காவல்துறையினர் மாநாடு...!

இவர் கடந்த சில மாதங்களாகவே நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 9 மணிக்கு சிகிச்சை பலனின்றி வளசரவாக்கத்தில் உள்ள அவரது  இல்லத்தில் உயிரிழந்தார். முன்னதாகவே, இவருக்கு நீரழிவு நோய் இருந்ததால் ஆபரேஷன் மூலம் ஒரு கால் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் வி.ஏ.துரை உயிரிழந்துள்ளது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரது உடல் அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.