கேரக்டருக்காக மும்பை ரெட்லைட் ஏரியாவுக்கு சென்ற நடிகை அலீயா பட்!!

கேரக்டருக்காக மும்பை ரெட்லைட் ஏரியாவுக்கு சென்ற நடிகை அலீயா பட்!!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகை அலீயா பட். சமீபத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’கங்குபாய் கத்தியவாடி’. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் வருகின்ற  25 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கிடையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே  மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இப்படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதால், பாலியல் தொழிலாளி ஒருவர் எப்படி அரசியலில் ஈடுபடுகிறார் என்பதை பொறுத்துதான்  கதையம்சம் அமைந்திருக்கும். ’கங்குபாய் கத்தியவாடி’ படத்தில் பாலியல் தொழிலாளியாகவும், அரசியல்வாதியாகவும் அலீயா பட் நடித்துள்ளார்.

இந்நிலையில் அலீயா பட் மும்பையில் உள்ள ரெட் லைட் ஏரியாவுக்கு சென்று வந்ததாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலீயா பட் எதற்காக அங்கு சென்றார் என்று பார்த்தால், அவர் நடித்த படத்திற்காக தான் சென்றதாக தெரிகிறது.

ஏனென்றால் அவர் நடிக்க இருந்தது மிகப் பெரிய கதாபாத்திரம் என்பதால் தான், மும்பையில் உள்ள ரெட் லைட் ஏரியாவிற்கு சென்று பாலியல் தொழிலாளிகளுடன் அலீயா பட் பழகியதாகவும் அவர்களது நடை உடை பாவனை மற்றும் சில அம்சங்களை கற்றுக் கொண்டதாகவும் அதனால் தான் இந்த படத்தில் அலீயா பட் தத்ரூபமாக நடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரின் தத்ரூபமான நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு மிகப் பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பு நிலவியுள்ளது.