என்னிடமிருந்து தப்பிக்க முடியாது... நஸ்ரியாவை முதுகில் சுமந்து சென்ற ஃபகத் பாசில்

என்னிடமிருந்து தப்பிக்க முடியாது... நஸ்ரியாவை முதுகில் சுமந்து சென்ற ஃபகத் பாசில்

மலையாள திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. பின்னர் 2013ல் ‘நேரம்’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் 2014 ஆம் ஆண்டு மலையாள நடிகர் ஃபகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் ஃபகத் பாசிலுடன் டிரான்ஸ், பிரித்வி ராஜுடன் கூடே என மொத்தம் மூன்று படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது 7வது திருமண நாளை கொண்டாடிய அவர், கணவர் தன்னை முதுகில் சுமந்து செல்லும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, திருமணநாள் வாழ்த்துக்கள், நீ அதிர்ஷ்டசாலி. பயணங்களின் போது நான் நடக்க மறுத்தால் நீ என்னை சுமந்து செல்கிறாய் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், எனது அனைத்து சாகச பயணங்களும் உன்னுடன் தான் நிகழ்ந்திருக்கிறது. அதனால் நீ என்னிடமிருந்து தப்பிக்க முடியாது. 7வது திருமணநாள் வாழ்த்துக்கள், என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து திரையுலகைச்சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு திருமணநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.