"Emotions are bigger than business".. புனீத் ராஜ்குமாரின் கடைசி பட டீசர்.. .. கண்கலங்கிய ரசிகர்கள்!!

புனீத் ராஜ்குமாரின் கடைசி படமான "ஜேம்ஸ்" படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

"Emotions are bigger than business".. புனீத் ராஜ்குமாரின் கடைசி பட டீசர்.. .. கண்கலங்கிய ரசிகர்கள்!!

மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஜேம்ஸ் படத்தின் டீசரில் வரும் ஒவ்வொரு காட்சிகளையும் ரசிகர்கள் கண் கலங்கி பார்த்து வருகின்றனர்.மேலும் அடுத்த மாதம் ஜேம்ஸ் படம் வெளியாக உள்ள நிலையில், தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி மாரடைப்பு காரணமாக பிரபல கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் உயிரிழந்தார். 46 வயதில் திடீரென மரணம் அடைந்தது அனைவருக்கும் பெரும் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில், புனீத் ராஜ்குமார் நடித்த கடைசி படமான "ஜேம்ஸ்" படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.

கிஷோர் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சேத்தன் குமார் இயக்கத்தில் புனீத் ராஜ்குமார் நடித்துள்ள படம் "ஜேம்ஸ்". ஜேம்ஸ் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. வலிமை படம் போல் இந்த படமும் டார்க் மாஃபியா, மார்க்கெட் பற்றி பேசும் காப் ஸ்டோரியாக உருவாகி உள்ளது.

புனீத் ராஜ்குமார் மறைந்து விட்டார் என்பதை ரசிகர்கள் மறந்து பார்க்கும் வகையில் படத்தில் ஆக்க்ஷன் காட்சிகள் பட்டையை கிளப்பியுள்ளது. அடுத்த மாதம் 17ஆம் தேதி ஜேம்ஸ் படம் வெளியாக இருக்கும் காரணமாக ராஜமெளலி தனது ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதியையே மார்ச் 25ம் தேதிக்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் படத்தின் டீசரை கண்கலங்கி பார்த்து வருகின்றனர். மேலும், ஜேம்ஸ் படத்தை மிகப்பெரிய வசூல் வேட்டை படமாக மாற்றுவோம் என உறுதி அளித்து வருகின்றனர்.