பார்வையாளர்கள் இல்லாததால், ‘ஷம்ஷேரா’ பல இடங்களில் காட்சிகள் ரத்து;

ரன்பீர் கப்பூர் நடிப்பில் வெளியாகியுள்ள ஷம்ஷேரா படத்தைப் பார்க்க, பார்வையாளர்கள் இல்லாத காரணத்தால், பல இடங்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பார்வையாளர்கள் இல்லாததால், ‘ஷம்ஷேரா’ பல இடங்களில் காட்சிகள் ரத்து;

சமீபத்தில் வெளியான ரன்பீர் கப்பூரின் ஷம்ஷேரா என்ற படம், வெளியாகி, ரசிகர்களால் பெரிதாக வரவேற்கப்பட்டது. ஆனால், வெளியாகிய பின், எதிர்பார்த்த அளவு வசூலைப் பெறவில்லை என்பது தான் உண்மை. மேலும், தற்போது, பல இடங்களில் பார்வையாளர்கள் இல்லாத காரணத்தால் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான இந்த ஷம்ஷேரா படம், கரண் மல்ஹோத்ரா இயக்கி, ஆதித்ய சோப்ரா தயாரித்திருந்தார். வரலாற்றுப் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில், ரன்பீருடன், வாணி கப்பூர், ரோனித் ராய், சௌரப் ஷுக்லா, அஷுடோஷ் ராணா போன்ற பலரும் நடித்துள்ளனர். 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் பல தியேட்டர்களில் 22ம் ஜூலை வெளியாகியது.

ஆனால், அந்த படமானது, வசூலில் தோல்வி அடைந்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. படம் வெளியான முதல் நாளில் வெறும் 10.25 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்த நிலையில், இரண்டு மற்றும் மூன்றாம் நாட்களில் பார்வையாளர்கள் அதிகமாக இல்லாமல் பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

இதனால், படக்குழு பரபரப்பாக இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.