அண்ணன் மகனுடன் கொஞ்சி விளையாடும் தனுஷ்.. வைரலாகும் கியூட்டான புகைப்படம்

தனுஷ் அவரது அண்ணனும், இயக்குனருமாகிய செல்வராகவனின் குழந்தையை கையில் வைத்து கொஞ்சுவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்ணன் மகனுடன் கொஞ்சி விளையாடும் தனுஷ்.. வைரலாகும் கியூட்டான புகைப்படம்

கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை பிஸியாக கால்சீட் கொடுத்து நடித்து வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றன. அதேபோல் தனுஷின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷும், இயக்குனர் செல்வராகவனும் சகோதரர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவர்கள் இருவரது கூட்டணியில் உருவான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதேபோல் இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Pudhupettai 2: Selvaraghavan confirms working with Dhanush again. Watch  video - Movies News

இந்நிலையில் நடிகர் தனுஷ் அவரது அண்ணனும், இயக்குனருமாகிய செல்வராகவனின் குழந்தையை கையில் வைத்து கொஞ்சுவது போன்ற புகைப்படம் ஒன்றை இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படத்தை பார்த்த தனுஷ் ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகின்றனர்.