அந்த கண்ணுக்கு தான் காசு...!! 1.5 லட்சம் கொடுத்து வெளிநாட்டு வகை நாய் வாங்கிய தனுஷ்

அந்த கண்ணுக்கு தான் காசு...!! 1.5 லட்சம் கொடுத்து வெளிநாட்டு வகை நாய் வாங்கிய தனுஷ்

கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் என்ற படம் உருவாகி வருகிறது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று நடிகைகள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் புதிதாக வாங்கிய நாய்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

உலகிலேயே உயரிய வகை நாய் குட்டியான ஒயிட் சைபீரியன் ஹஸ்கி என்ற வகையைச் சேர்ந்த இரண்டு குட்டிகளை லட்சக்கணக்கில் கொடுத்து வாங்கியுள்ளார். அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ள, தனுஷ் நீலநிறக் கண்களை உடைய அந்த நாய் குட்டிகள்களை வரவேற்று பகிர்ந்துள்ளார்.