’நானே வருவேன்’ படத்தின் அப்டேட்டை சொன்ன யுவன்!

செல்வராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் அப்டேட்டை  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

’நானே வருவேன்’ படத்தின் அப்டேட்டை சொன்ன யுவன்!

செல்வராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் அப்டேட்டை  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமா திரையுலகில் தனித்துவ மிக்க இயக்குனர்களுள் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் தனுஷுடன் இணைந்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

இந்நிலையில், இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு பிறகு ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்து உள்ளனர். வி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள நிலையில், பாடல்கள் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். அதில், நானே வருவேன் படத்தின் இரண்டாவது பாடலை கம்போஸ் செய்து கொண்டிருப்பதாகவும், விரைவில் இந்த பாடலை கேட்க ரசிகர்கள் அனைவரும் தயாராக இருங்கள் எனவும் யுவன் தெரிவித்துள்ளார்.