ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து செல்லும் விஜய்- வீடியோ வைரல்....

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பிற்காக டெல்லி சென்றிருக்கும் நடிகர் விஜய், அங்குள்ள ஷாப்பிங் மாலில், நடந்து செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து செல்லும் விஜய்- வீடியோ வைரல்....

கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க, செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஜார்ஜியாவில் இதன் முதல்கட்டப் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். அதனைதொடர்ந்து இந்த படத்தின் சண்டைக் காட்சியை படமாக்குவதற்காக படக்குழுவினர் கடந்தவாரம் டெல்லிக்குச் சென்றனர். இதற்காக நடிகர் விஜய் சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றார். விமான நிலையத்திற்குள் விஜய் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

டெல்லியில் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் விஜய் டெல்லி மால் ஒன்றுக்கு வந்திருந்தார். அந்த மாலில் நடிகர் விஜய் பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் அமைதியாக  வலம் வரும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது.