முன்னனி நடிகருடன் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய்.....வைரலாகும் புகைப்படம்

மலையாள திரையுலகின் முன்னனி நடிகரான நிவின்பாலியுடம் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.

முன்னனி நடிகருடன் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய்.....வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். 

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த ஐந்து நாட்களுக்குமுன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதற்கடுத்து தனது 66-வது படமாக நேரடி தெலுங்கு மற்றும் தமிழ் படத்தில் நடிக்கிறார் விஜய். இந்தப் படத்தை இயக்குநர் வம்சி இயக்குகிறார். 

நடிகர் விஜய்க்கு சஞ்சய் என ஒரு மகனும் திவ்யா என ஒரு மகளும் உள்ளனர் . படம் இயக்குவதில் ஆர்வமுள்ள சஞ்சய் அது சம்பந்தமான படிப்பை லண்டனில் படித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், மலையாள திரையுலகின் முன்னனி நடிகர்களின் ஒருவரான நிவின் பாலியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.