மாஸ்டர் பட கதைக்கு நோ சொன்ன பாலிவுட் நடிகர்..! வித்தியாசமாக ஒன்றும் இல்லை என ரிஜெக்ட் செய்ததாக தகவல்..!

மாஸ்டர் கதையில் பல மாற்றங்களை செய்தும் திருப்தி இல்லை..!

மாஸ்டர் பட கதைக்கு நோ சொன்ன பாலிவுட் நடிகர்..! வித்தியாசமாக ஒன்றும் இல்லை என ரிஜெக்ட் செய்ததாக தகவல்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் என பலர் நடிப்பில் கடந்தாண்டு வெளியானப் படம் மாஸ்டர். தமிழில் வெற்றியடைந்த படத்தை ஹிந்தியில் ரீமெக் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

மாஸ்டர் ஹிந்தி ரீமெக்கில், சல்மான்கான் நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருகின்றன. கடைசியாக பிரபுதேவா இயக்கத்தில் அவர் நடித்த ராதே படமும் சொல்லும் அளவுக்கு பெரிய அளவில் பேசப்படவில்லை.

 

தன்னை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான கதைகளத்தில் மட்டுமே நடிப்பது என முடிவெடுத்திருக்கிறார் சல்மான்கான். மாஸ்டர் படத்தின் கதையால் திருப்தியடையாத சல்மான், சில பல மாற்றங்களை செய்தும் கூட, அதில் நடிக்க விருப்பமில்லாததால், மாஸ்டர் ரீமெக்கில் நடிக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.