ஒரு மில்லியன் பார்வையாளர்களை எட்டிய பகாசுரன்!!!

செல்வராகவன் நடிப்பில் உருவாகிய பகாசுரன் படத்தின் டீசர் தற்போது ஒரு மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது.

ஒரு மில்லியன் பார்வையாளர்களை எட்டிய பகாசுரன்!!!

செல்வராகவனின் படங்கள் என்றால், அது இன்று புரியாது வீட்டிற்கு போய், தனியாக பல முறை பார்த்தால் மட்டும் தான் புரியும். அப்படிப்பட்ட கதைகளையும், படங்களையும் தான் கொடுப்பார் அவர். அவரது நடிப்பு திறன், அவரது கதையின் கதாபாத்திரங்கள் மூலமாகத் தான் இத்தனை வருடங்கள் தெரியவந்தது. ஆனால், தற்போது முழுநேர நடிகராக உருவெடுத்து மக்கள் மத்தியில் பிரசித்தி ஆகி வருகிறார் செல்வராகவன்.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் போன்ற படங்களின் மூலம் பிரபலமான இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசுரன்' படம் உருவாகியுள்ளது, அதன் டீசர் நேற்று வெளியானது. மிகவும் வித்தியாசமான கதிஅயாக உருவாகியுள்ள நிலையில், தவறான வழியில் செல்லும் இளைஞர்களை தண்டிக்கும் கதாபாத்திரத்தில் செல்வராகவ்ன் நடித்திருக்கிறார். அவரது தவறுகளைக் கண்டுபிடிக்கும் கதாபாத்திரமாக நட்டி நடராஜன் நடித்திருக்கிறார்.

ஏற்கனவே, சானிகாயிதம் மற்றும் பீஸ்ட் படங்களில் நடித்து, தனது நடிப்பு திறனை அமோகமாக வெளிப்படுத்தி பல ரசிகர்களை ஈர்த்த செல்வராகவன், இந்த படத்திற்கான எதிரபார்ப்பை மேலும் அதிகரித்துள்ளார் என்று தான் கூற வேண்டும். அது மட்டுமின்றி, அப்பட்டமான காட்சியமைப்புகள் கொண்டாலும், தவறாக தெரியாத வகையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் குவித்துள்லது குறிப்பிடத்தக்கது.