படம் ரிலீஸ் போல தியேட்டரில் குவிந்த அஜித் ரசிகர்கள்.. வியந்து போன பொதுமக்கள்
கூகுளின் சர்ச் எஞ்சினே ’அடேய் போதும் என்ன விட்ருங்கடா!’ என கதறிக்கொண்டுதான் இருக்கிறது. விஷயம் என்ன தெரியுமா? எல்லாம் நம்ம அஜித்-ன்! ரசிகப்பயபுள்ளைகள் இருபத்து நாலு மணி நேரமும் ‘வலிமை அப்டேட்ஸ்’‘வலிமை அப்டேட்ஸ்ன்னு கேட்டு கேட்டே தான்.
சீஎம், பிஎம் என யார் ட்வீட் போட்டாலும், என்ன வீடியோ போட்டாலும் அங்கு கமாண்ட்ஸில் கேட்டு வைப்பதும் வலிமை பற்றி ஏதாவது நியூஸ் வந்துடாதா என கூகுளில் வெறிகொண்டு தேடுவதினால் தான் இதற்கு காரணம்.
அப்படம் பொங்கல் ஜனவரி 13 அன்று ரிலீஸ் ஆகும் ! என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அபீஸியல் அப்டேட்ஸ்கள் மளமளவென வந்துவிழும் என எக்கச்சக்கமாக எதிர்பார்க்கின்றன ரசிகர்கள். அதனால்தான் இரண்டு கைகளின் பெருவிரல் நுனிகளும் பிய்ஞ்சு பிளீடிங் ஆகுமளவுக்கு சர்வ நேரமும் கூகுளை நோண்டு நோண்டுனு நொங்கெடுத்தது.
ஆனாலும் மனம் இறங்காத போனி மாம்ஸ், அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்புகளையும் அள்ளிவிடாமல், அப்பப்ப ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு ரசிகர்களுக்கு ஸ்நாக்ஸ் மாதிரி கிள்ளி போட்டு வந்தார்.
அந்த வகையில் இன்று மாலை 6:30 மணிக்கு படத்தின் பொறுத்தது போதும் நேரம் வந்துவிட்டது, உங்க போனின் ஹெட்சேட்டை எடுத்து வச்சிக்கோங்க ட்ரெய்லரை ரிலீஸ் செய்யப்போகிறோம் என ட்வீட் போட்டார். அஜித்தின் ரசிகர்களோ உற்சாகம் தாங்காமல் வலிமை குறித்து ட்வீட் போட்டு டுவிட்டரை மிரளவிடுகின்றனர். காரணம் ஒவ்வொரு அஜித் ரசிகனின் கனவு நாள் இன்று.. ஆம் இந்த இரண்டு வருடங்களில் வலிமை அப்டேட் கேட்காத இடம் இல்லை, மொத்தத்திற்கும் சேர்ந்து இன்று தீர்த்துக்கொள்ளப்போகிறார்கள் என்றே தெரிகிறது.
இதுல ஒரு விசேஷம் என்னன்னா? திண்டுக்கல்ல இருக்கற உமா ராஜேந்திரா தியேட்டரில் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு வந்துள்ளதைப்போல குவிந்திருக்க, அந்த வழியே போகும் மக்களோ என்னங்கடா தியேட்டர் ல டிக்கெட் வாங்கிட்டு இருக்கிங்க என்ன படம்?அதற்கு அஜித் ரசிகர்களோ படத்துக்கு இல்ல வலிமை பட டிரெய்லர்க்கு என் சொல்ல மக்களும் படம் பார்க்க டிக்கெட் வாங்குறது சரி, அதென்னப்பா ட்ரெய்லருக்கு கூடவா இவ்வளவு கூட்டம் கூடுவீங்க என சிலாகித்து போகின்றனர்.