தெலங்கானா மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா நடிகர் பிரகாஷ்ராஜ்?

தெலங்கானா மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக நடிகர் பிரகாஷ்ராஜ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா நடிகர் பிரகாஷ்ராஜ்?

திரையுலகில் மட்டுமல்லாது அரசியலிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். பாஜகவின் கொள்கைகளை அதிகம் விமர்சிப்பவராகவும் உள்ளார்.

இந்தநிலையில்,  பாஜகவுக்கு எதிராக ஆதரவு திரட்டி வரும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், நடிகர் பிரகாஷ் ராஜை  அவரது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க திட்டமிட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சந்திரசேகரராவை,  பிரகாஷ் ராஜ் திடீரென சந்தித்திருந்திருந்தார். இந்நிலையில், வருகிற ஜூன் மாதத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக உள்ளதாகவும்,  அதில் ஒரு எம்.பியாக பிரகாஷ்ராஜ் தேர்ந்தெடுக்கவுள்ளதாகவும் கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.