மிஷ்கின் உடன் இணைகிறாரா நடிகர் அதர்வா..?

இயக்குனர் மிஷ்கின் உடன் நடிகர் அதர்வா படம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மிஷ்கின் உடன் இணைகிறாரா நடிகர் அதர்வா..?

இயக்குனர் மிஷ்கின் உடன் நடிகர் அதர்வா படம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்திக் ராஜா இந்தப் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிசாசு 2 படத்தை அடுத்து மிஷ்கின் அதர்வா நடிப்பில் புதிய படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது நடிகர் அதர்வா அவரது இயக்கத்தில் நடித்தால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என்று படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகத் தொடங்கியுள்ளது.