ஒரே நாளில் வெளியான 9 திரைப்படங்கள்!

ஒரே நாளில் வெளியான 9 திரைப்படங்கள்!

இந்த வார வெளியீடாக தமிழ் திரையுலகில் இன்று (ஜூலை 28-ம் தேதி) ஒரே நாளில் 9 தமிழ் படங்கள் திரைக்கு வருகின்றன.

சந்தானத்தின் DD Returns, பரத்தின் LOVE, ஹரிஷ் கல்யாணின் LGM, அஸ்வினின் PIZZA-3, உதய் கார்த்திக்கின் DieNoSirs, Terror,  யோக்கியன், அறுமுடைத்த கொம்பு, மேல இருக்குறவன் பாத்துக்குவான் ஆகிய படங்கள் இன்று வெளியாகி உள்ளன.

இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'DD ரிட்டர்ன்ஸ்' படத்தில் கதாநாயகியாக சுரபி நடித்துள்ளார். ஆர்.கே.எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்துக்கு அஃப்ரூ இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் இன்று திரைக்கு வருகிறது.

RP பாலா இயக்கி தயாரித்துள்ள லவ் திரைப்படம் பரத்தின் 50-வது படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் பரத்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். 2020-ல் மலையாளத்தில் வெளியான LOVE படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி உள்ள இந்த லவ் திரைப்படமும் இன்று வெளியாகிறது.

தோனி தயாரிப்பின் முதல் படைப்பாக ஹரிஷ் கல்யாண், இவானா நடித்துள்ள LGM திரைப்படம் இன்று திரைக்கு வருகிறது. ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகி உள்ள Lets Get Married படத்தில் நதியா, யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

CV குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஸ்வின் நடிப்பில் உருவாகி உள்ள PIZZA 3 - THE MUMMY திரைப்படம் இன்று வெளியாகிறது. ஹாரர் த்ரில்லராக உருவாகி உள்ள இத்திரைப்படத்தில் பவித்ரா மாரிமுத்து, காளி வெங்கட், ரவீனா தஹா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இது தவிர உதய் கார்த்திக்கின் DieNoSirs, Terror, யோக்கியன், அறுமுடைத்த கொம்பு, மேல இருக்குறவன் பாத்துக்குவான் ஆகிய படங்களும் இன்று திரையரங்குகளில் வெளியாகின்றன.

இதையும் படிக்க:பிளாஸ்டிக் மாசுவை முடிவுக்கு கொண்டுவர மோடி வலியுறுத்தல்!