பிரபல தொடரின் 3வது சீசன்.. நடிக்க மறுத்த நடிகை.. என்ன காரணமாக இருக்கும்??

தனக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை கொடுத்த சீரியலில் நடிக்க தேவதர்ஷினி மறுத்துவிட்டாராம். 

பிரபல தொடரின் 3வது சீசன்.. நடிக்க மறுத்த நடிகை.. என்ன காரணமாக இருக்கும்??

நடிகை தேவதர்ஷினி சீரியலில் தான் தனது பயணத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து பல வெற்றி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில், தனக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை கொடுத்த சீரியலில் நடிக்க தேவதர்ஷினி மறுத்துவிட்டாராம்.

டிவி தொகுப்பாளராக பயணத்தை ஆரம்பித்த நடிகை தேவதர்ஷினி, இதன் பிறகு சன் டிவியின் மர்மதேசம் என சீரியலில் தான் முதன் முதலாக நடியாக நடித்தார். இந்த சீரியல் மூலம் அவர் பிரபலமடைந்தார். இது அவருக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது.

தொடர்ந்து சின்ன பாபா.. பெரிய பாபா என்ற தொடரில் நடித்து மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பார்த்திபன் கனவு படத்தில் விவேக்கின் மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் விவேக்கின் காமெடிகளுக்கு ஈடுகொடுத்து நடித்திருந்த வேடம் அனைவரையும் கவர்ந்தது.

தொடர்ந்து நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவான காஞ்சனா திரைப்படத்தில் கோவை சரளாவுடன் இவர் செய்யும் காமெடி கலாட்டாக்கள் வேற லெவலில் இவருக்கு ரசிகர்களை தேடி தந்தது. இதே போல் 96 படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு இவருக்கு மேலும் புகழை தேடி தந்தது. தற்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்து வருகிறார். அதே போல், படங்களிலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில், சன் டிவியின் பிரபல தொடரான ரமணி Vs ரமணி தொடரின் மூன்றாவது சீசன் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய சீசன் தேவதர்ஷினிக்கு ஒரு மிகப்பெரிய அங்கீராத்தை தேடி தந்தது. மூன்றாவது சீசன் தொங்க உள்ள நிலையில், அதில் அவர் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்... தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் அதிம் வருவதால், ரமணி Vs ரமணி சீரியலில் நடிக்க தேவதர்ஷினி மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.