"3 வருட எதிர்பார்ப்பு" நாடு முழுவதும் அதிரடியாக வெளியான அஜித்தின் "வலிமை".. வேற லெவலில் கொண்டாடி வரும் ரசிகர்கள்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாடு முழுவதும் வெளியாகியுள்ளது.

"3 வருட எதிர்பார்ப்பு" நாடு முழுவதும் அதிரடியாக வெளியான அஜித்தின் "வலிமை".. வேற லெவலில் கொண்டாடி வரும் ரசிகர்கள்

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது படம் வலிமை. குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் போனி கபூர் பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படம் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாக இருந்தது.  

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியீடு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், வலிமை படம் இன்று பிரம்மாண்டாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் ரிலீஸாகியுள்ளது. இரவு முதலே ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் குவிந்து ஆரவாரத்துடன் மேளதாளங்களுடன் பட்டாசு வெடித்தும். அஜித் போஸ்டருக்கு பாலபிசேகம் செய்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கில் இன்று அதிகாலை  சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகை ஹீமா குரேஷி ஆகியோர் முதல் காட்சியை காண வருகை தந்தனர்.