எஸ்.சி.எஸ்.டி மாணவர்களுக்காக நிபுணர் குழு அமைப்பு...! யு.ஜி.சி

எஸ்.சி.எஸ்.டி   மாணவர்களுக்காக நிபுணர் குழு  அமைப்பு...!   யு.ஜி.சி

பல்கலைக்கழகங்களில் பட்டியலின பழங்குடியின மாணவர்களுக்கு பாரபட்மற்ற சூழலை உறுதிசெய்யும் வகையில் நிபுணர் குழுவை பல்கலைக்கழக மானியக்குழு அமைத்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 39 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டவர்களில் ,  பெரும்பாலானோர் பாரபட்ச அணுகுமுறையால் மனமுடைந்து உயிரிழந்தது எஸ். சி.எஸ்.டி மாணவர்கள் என தெரியவந்துள்ளது.

தொடர்ந்து சிறுபான்மை மாணவர்களின் மரணம் உணர்வுப்பூர்வானது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் பல்கலைக்கழகங்களில் எஸ். சி.எஸ்.டி மாணவர்களுக்கு பாரபட்சமற்ற சூழலை உறுதி செய்யவும் விதிமுறைகளை திருத்தவும் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க   | ”6 குடியரசு தலைவர்கள் மாணவர்களாக பயின்றது சென்னை பல்கலைகழகத்திற்கு பெருமை” திரெளபதி முர்மு