ஆளில்லா பேருந்தின் படியில் தொங்கிய மாணவன்... தட்டி கேட்ட நடத்துனரை மிரட்டிய பரிதாபம்!!

ஆளில்லா பேருந்தின் படியில் தொங்கிய மாணவன்... தட்டி கேட்ட நடத்துனரை மிரட்டிய பரிதாபம்!!

திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவர்கள் பேருந்தில் தொங்கியவாறே பயணித்தபோது, நடத்துனர் மேலே ஏறி வரச் சொன்னதால், அவரை அவமானப்படுத்திய வீடியோ, இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

பொதுவாக பேருந்தில் தொங்கிக் கொண்டே பயணிக்கும் மாணவர்கள் பலரும் கூறுவது, எங்களுக்கு பேருந்து வசதி இல்லை, கூடுதலாக சிறப்பு பேருந்துகள் விட வேண்டும் என்று தான் கோரிக்கைகள் வைப்பதுண்டு. ஆனால் இந்த மாணவன் தொங்கியவாறு வருவது, பேருந்துக்குள் இடம் இல்லாததால் அல்ல, ஆர்வக்கோளாறால் செய்யும் வேலையாகும்.

செங்கம் பகுதியில் இருந்து பள்ளிப்பட்டு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற அரசுப் பேருந்து ஒன்றில், 16 வயது மாணவன் ஒருவன் ஏறி உள்ளே செல்லாமல் படியிலேயே தொங்கிக் கொண்டு பயணம் செய்துள்ளார்.

சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இந்த பயணத்தின்போது, பள்ளி மாணவர்கள் உள்ளே இடமிருந்தும் வெளியிலேயே குரங்கு போல தொங்குவதும், அப்படியே உள்ளே ஏறினால் கத்தி கூப்பாடு போட்டு பிற பயணிகளின் நிம்மதியைக் கெடுப்பதுமாய் இருப்பது வழக்கம். 

இந்த நிலையில் பேருந்தில் பயணித்த மாணவன் தொங்கியவாறும், ஒரு காலை சாலையில் வைத்து தேய்த்தபடியும் வருவதை பார்த்து கோபமடைந்தார் நடத்துர். அதனால், மேலே ஏறி வாப்பா என கூறியதற்கு ணோவ்.. மேலலாம் கை வைக்காத என கூறியதோடு, நடத்துரை கண்டபடி பேசியுள்ளார். மாணவர்கள் மீது கை வைத்தால் விபரீதமாகும் என கணித்த நடத்துனர், என்ன சொல்வதென்றே தெரியாமல் அவமானத்துடன் உள்ளே சென்றார்.

தவறு செய்யும் மாணவர்களை தண்டிப்பதற்கு ஆசிரியர்களுக்கு உரிமை இல்லை.. பெற்ற பிள்ளைகளை தண்டிப்பதற்கு பெற்றோருக்கும் உரிமை இல்லை.. பொது வெளிகளில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாலும் அதைக் கேட்பதற்கு ஒருவருக்கும் உரிமையில்லை என்றால் மாணவர் சமுதாயத்தை வழிநடத்தும் உரிமை யாருக்குத்தான் உள்ளதோ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிக்க: "தொழில் 4.0" புதிய தொழில்நுட்ப மையங்கள் திறப்பு!