பாம்பை கடித்து வீடீயோ... இளைஞர்கள் கைது

பாம்பை கடித்து வீடீயோ... இளைஞர்கள் கைது

பாம்பின் தலையை கடித்து துண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த மூன்று இளைஞர்கள் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த சின்ன கைனூர் பகுதியை சேர்ந்த மோகன், சூர்யா, சந்தோஷ் ஆகிய மூன்று இளைஞர்களும் சமூக வலைத்தளங்களில் பரவலாக வேண்டும் என்பதற்காக பாம்பை பிடித்து அதனை உயிருடன் இருக்கும் பொழுது பாம்பின் தலையை கடித்து மோகன் என்பவர் துண்டித்து உயிர் இழக்க செய்து சாலையில் வீசியுள்ளனர். அதனை மற்ற இரண்டு நண்பர்களும் வீடியோவாக பதிவேற்றம் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தனர்

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக பரவி வந்த நிலையில் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர். தற்போது வனவிலங்குகளுக்கான குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வைல்ட் லைஃப் க்ரைம் கண்ட்ரோல்(WCC) இதனைக் கண்டு ஆற்காடு வனச்சரகத்திற்கு புகார் தெரிவித்தனர். புகாரைத் தொடர்ந்து மோகன் ,சூர்யா, சந்தோஷ் ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்து வனவிலங்குகளை துன்புறுத்துதல், வனவிலங்குகளுக்கு மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது