தொடரும் ரத்த வெறி... சீவலப்பேரி கொலை சம்பவத்தின் பின்னணி என்ன?

சீவலப்பேரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த மாயாண்டி என்பவரை கடந்த வருடம் நடந்த கொலைக்கு பழிக்கு பழி தீர்க்க 10 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

தொடரும் ரத்த வெறி...  சீவலப்பேரி கொலை  சம்பவத்தின் பின்னணி என்ன?

திருநெல்வேலி : சீவலப்பேரியில் பழமைவாய்ந்த சுடலைமாட சுவாமி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக சீவலப்பேரியில் இருவேறு சமூகத்துக்கு இடையே கடுமையான போட்டிகள் நிலவி வந்தது.

இந்நிலையில் சுடலைமாட சுவாமி கோயில் பூசாரி சிதம்பரம் என்கிற சுப்பையா துரை என்பவரை கடந்த ஆண்டு மாற்று சமூகத்தைச் சேர்ந்த 12 பேர் கொண்ட கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.

மேலும் படிக்க | பெண்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய வீடியோ...கையும் களவுமாக பிடித்த பெண்...!

இந்த கொலைக்கு சாட்சியாய் இருந்தவரின் உறவினர் தான் ஆடுமேய்க்கும் மாயாண்டி. கடந்த 10-ம் தேதியன்று வழக்கம் போல ஊர் எல்லையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது மாயாண்டியை திடீரென அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி வீசி விட்டு தப்பியோடியது. முகம் மற்றும் கைகள் வெட்டப்பட்டு துடிதுடித்த மாயாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மேலும் படிக்க | நட்புன்னா என்னன்னு தெரியுமா? இந்த காலத்தில் நட்புக்காக உயிர் கொடுத்த இளைஞர்...

பூசாரி சுப்பையாதுரை மற்றும் மாயாண்டி இரு குடும்பத்தினருக்குமே நிதியுதவி வழங்குவதுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் மற்றும் பூசாரியின் உடலை சுடலைமாட சாமி கோவில் அருகிலேயே புதைக்க வேண்டும் என்பதே இவர்களின் வாதமாக இருந்தது.

ஆனால் அரசு தரப்பில் சுப்பையா துரை, அல்லது மாயாண்டி இந்த இருவரில் ஒருவரது குடும்பத்துக்குதான் சலுகைகள் வழங்கப்படும் எனவும், அதை ஊர் மக்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் எனவும் கலெக்டர் குறிப்பிட்டதாக தெரிகிறது. 

மேலும் படிக்க | டெலிவரி ஊழியரை சிதைத்த லாரி டிரைவர் தப்ப முயற்சி...

மாயாண்டியின் கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் எதிர்தரப்பு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஊரை விட்டே தப்பித்துள்ளனர்.

இவர்களில் தூத்துக்குடி வல்லநாட்டில் பதுங்கியிருந்த கொலையாளிகள் 9 பேரை தற்போது கைது செய்துள்ள போலீசார் கொலை சம்பந்தப்பட்ட மீதி 9 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

மேலும் படிக்க | காவலாளியை மண்வெட்டியால் வெட்டிய இருவர் கைது...