காவலாளியை மண்வெட்டியால் வெட்டிய இருவர் கைது...

நெல்லிக்குப்பம் அருகே இரும்பு கடை காவலாளியை, மண்வெட்டியால் வெட்டிய மர்ம நபரை போலீசார் தேடி வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த இருவர் கைதாகியுள்ளனர்.
காவலாளியை மண்வெட்டியால் வெட்டிய இருவர் கைது...
Published on
Updated on
1 min read

கடலூர் : நெல்லிக்குப்பம் அருகே உள்ள தோட்டப்பட்டு மெயின் ரோட்டில் பழைய இரும்பு கடையில், டி. குமாரபுரம் பகுதியை சேர்ந்த முருகையன் (59) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், முருகையன் நேற்றிரவு வழக்கம் போல இரும்பு கடையில் காவல் பணிக்கு வந்துள்ளார்.

அப்போது நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் இரும்புக் கடைக்குள் ஒளிந்திருந்த நபரை பிடிக்க முயன்றபோது, அருகிலிருந்த மண்வெட்டியால் மர்ம நபர் முருகையனை தலையில் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி கீழே விழுந்ததும், மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இன்று அதிகாலை, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் முருகையன் ரத்த வெள்ளத்தில் அசைவின்றி கிடந்ததைப் பார்த்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முருகையனை மீட்டு, உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது முருகையன், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், நெல்லிக்குப்பம் போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். காவலாளியை மண்வெட்டியால் வெட்டிய மர்ம நபர்களைக் கண்டுபிடிக்க, கைரேகை நிபுணர்கள் மற்றும், மோப்ப நாய்களின் உதவியைப் பெற்று குற்றவாளிகளைத் தேடினர்.

இந்நிலையில், காவலாளி முருகையனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்த வழக்கில் அதே பகுதியை சார்ந்த திவாகர்(19) மற்றும் தமிழ்வல்லவன்(20) என்ற இருவரை கைது செய்து விசாரணை செய்தனர்.

அதில், இரும்பு திருட வந்ததாகவும் இரும்புகளை திருடிக் கொண்டு வெளியே செல்லும் பொழுது காவலாளி பார்த்து கூச்சலிட்டதால் எங்க வெளியே சொல்லி விடுவார் என்று பயத்தில் மண்வெட்டியால் தாக்கி விட்டு தப்பித்ததாக கூறினர் அதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் வைத்து சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com